அழகு / ஆரோக்கியம்

முடக்கத்தான் கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்

2000 வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோர்கள் இயற்கை மருத்துவ குணம் கொண்ட பல கீரை வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதில் ஒன்று தான் முடக்கத்தான் கீரை.

நம்மில் பலர் சிறுநீரை உடனடியாக கழித்து விடாமல் அடக்கி வைத்துக் கொள்கிறோம். இது மிகவும் ஆபத்தான ஒன்று. நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால் உடலின் பிற பகுதிகளுக்கு சென்று விடுவதால், இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் மூட்டுகளில் படிந்து விடுகிறது. இதனை கரைத்து சிறுநீரகத்துக்கு எடுத்துச் சென்று விடும் சிறப்பு முடக்கத்தான் கீரைக்கு உள்ளது.

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கழுவி வெட்டியதும், இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் உப்பு , மிளகு கலந்து சூப் செய்து அருந்தி வந்தால் முடக்கு வாதம் , நரம்பு தளர்ச்சி போன்றவை குணமாகும். இரண்டு மாதங்கள் தொடர்ந்து பருகி வந்தால் மூட்டு வலியிலிருந்து பூரணமாக குணமடையலாம்.

இந்த கீரையை தோசை மாவுடன் சேர்த்து தோசை செய்து சாப்பிடலாம்.

தோல் வியாதிகளுக்கும் சிறந்ததாகும். இந்தக் கீரையை விழுதாக அரைத்து சொறி சிரங்கு இருக்கும் இடங்களில் பூசி வர குணமாகும்.

மலச்சிக்கல் இருப்பவர்கள் இந்த கீரையை சம்பல் செய்து சாப்பிடலாம்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் சிறந்தது. குழந்தை பெற்ற பெண்களுக்கு அடிவயிற்றில் கீரையை அரைத்து பூசினால் கருப்பையில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறும்.

காது வலி உள்ளவர்களுக்கு இந்த இலையின் சாறு எடுத்து சில துளிகளை விட காது வலி நீங்கும்.

கருத்து தெரிவிக்க