உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா அதிகாரியை முல்லைத்தீவு அதிகாரி தாக்கவில்லை

வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளரை முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் தாக்கியதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முல்லைத்தீவில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளரை நான் தாக்கியதாகவும் அதன் பின்னர் என்னை பொலிஸார் கைது செய்ததாகவும் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் பொய்யானது.

உண்மையான விடயங்களை திசைதிருப்பும் நோக்கோடு சிலர் ஊடகங்களுக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதன் அடிப்படையில் தனிப்பட்ட ஒருவருடைய கருத்தை ஆதாரமாக கொண்டு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த வகையில் வடமாகாண விவசாய திணைக்களம், யாழ் வைத்தியசாலை நிர்வாகம் ,பொலிஸ் திணைக்களம், போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு உண்மையான நிலமைகளை அறிந்து செய்தியை வெளியிட வேண்டும். என நான் கோருகின்றேன்

மேலும் வவுனியா பிரதி விவசாய பணிப்பாளரை நான் தாக்கியதாகவும் என்னை சிறையில் அடைத்ததாகவும் வெளியாகி செய்தி எனது சுயகௌரவத்தை பாதிக்கும் வகையில் இருப்பதோடு அவை உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க