போதைப்பொருள் தொடர்பிலான குற்றவாளிகளுக்கு மீண்டும் மரண தண்டனை அமல்படுத்தப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பத்து அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மாற்று கொள்கை மைய பேராசிரியர் சி. குணரத்ன, வைத்தியர் கே. சேனரத்ன மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை மரண தண்டனை கைதிகளின் சட்டத்தரணி ஆகியோர் குறித்த மனுக்களை தாக்கல் செய்தனர்.
மரண தண்டனையை அமல்படுத்துவது அடிப்படை மனித உரிமை மீறல் என்று கூறியுள்ள மனு தாரர்கள், போதைப்பொருள் கடத்தலுக்கு தண்டனை பெற்ற கைதிகளுக்கு மட்டுமே மரணதண்டனை விதிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளமை அரசியலமைப்பின் 12 (1) வது சட்டத்தை மீறுவதாகும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க