சினிமா

தந்தையுடன் இணைந்து இசை அல்பம் தயாரிப்பது சவாலானது! ஏ. ஆர். ரஹ்மானின் மகன்.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானின் மகன் ஏ. ஆர். அமீன் “சகோ” என்ற இசை அல்பத்தை தன் தந்தை ரஹ்மானுடன் இணைந்து தயாரித்துள்ளார். இவ் அல்பத்திற்கு வீடியோ காட்சிகளை அமித் கிருஸ்ணன் இயக்கியுள்ளார். இதனை சோனி நிறுவனம் வெளியிட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ் இசை அல்பம் பற்றி ஏ. ஆர். அமீன் கருத்து தெரிவிக்கையில், தனது இசைப்பயணத்தை சகோவுடன் தொடங்குவதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்வதாகவும், இப்பாடலை தன் தந்தையுடன் சேர்ந்து தயாரிப்பது சவாலாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரம், தன் தந்தையுடன் இணைந்து வேலை செய்வது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் மக்கள் தன் பாடலை பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதைப் பற்றி ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ரசிகர்களின் அன்பான வரவேற்பை பெறுவேன் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பாடல் பற்றி, ஏ. ஆர். ரஹ்மான் தான் இதுவரை நூற்றுக்கணக்கான பாடகர்களை தனது இசையின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர்களின் பங்களிப்பு அவர்களை இசை வழியே மேம்பட செய்திருக்கிறது எனவும், தன் மகன் அமீனுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் இப்பாடல் அனைத்து ரசிகர்களின் உள்ளத்தில் ஒரு தனி இடத்தை பிடிக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க