இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றம் என்ற ஜனாதிபதியின் தீர்மானம் தற்போது நிறைவேறாது என்றே சட்டத்தரப்புக்கள் கூறுகின்றன.
போதைவஸ்து குற்றச்சாட்டுக்கு உள்ளாகி குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் நால்வரை தூக்கிலிடும் பணிப்புரையில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக அண்மையில் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்திருந்தார்.
எனினும் கடந்த வாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தூக்குத் தண்டனைக்கு தடையுத்தரவு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் விசாரணை அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.
அதேநேரம் நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை தூக்குத்தண்டனையை நிறைவேற்றப்போவதில்லை என்ற உறுதிமொழியை சிறைச்சாலைகள் ஆணையாளரும் நீதிமன்றுக்கு வழங்கியுள்ளார்.
எனவே தூக்குத்தண்டனை இலங்கையில் இப்போதைக்கு நடைமுறைக்கு வரும் ஒரு சட்டமாக இருக்காது என்று சட்டத்தரப்புகள் எதிர்வை வெளியிட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க