சினிமா

கடாரம் கொண்டான் படத்தின் டிரைலர் ரிலீஸ்

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் `கடாரம் கொண்டான்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்’.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றது. இப்படத்தின் டப்பிங் பணியை விக்ரம் முடித்துவிட்டதாக படக்குழுவினர் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் ஜூலை 3-ந் திகதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க