இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள ரஸ்யா விருப்பம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கும் பிராந்திய பாதுகாப்பு சவால்களுக்கும் முகங்கொடுக்கும் வகையில் இந்த ஒத்துழைப்புக்கு ரஸ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.
மொஸ்கோவுக்கு சென்று இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ரவீந்திர விஜேகுணவர்த்தனவிடம், ரஸ்யாவின் பிரதம இராணுவ அதிகாரி வெலரி ஜெரஸிமோவ் இதனை தெரிவித்துள்ளார்.
தென்னாசியாவில் ரஸ்யா நம்பத்தகுந்த பங்காளர் என்று இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 60 வருடங்களாக ரஸ்யாவுடன் இலங்கையுடன் சிறந்த உறவைப்பேணி வருகிறது.
இந்தநிலையில் ரஸ்யா மற்றும் இலங்கையின் ஜனாதிபதிகள் அண்மையி;ல் இணங்கிக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரஸ்ய இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க