வெளிநாட்டு செய்திகள்

முகமது மோர்ஸி மரணம் தொடர்பில் விரிவான விசாரணை அவசியம் :

எகிப்தின் முதல் ஜனாதிபதி முகமது மோர்ஸி (67) , 2013 இல் அந்நாட்டு இராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கொன்றதாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மோர்ஸியை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக முன்னிலைப்படுத்திய போது, அங்கேயே அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில் ஒசாகா நகரில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த எர்டோகன், மோர்ஸியின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும், உலக அரசியல் தலைவர்களும் அதனை வலியுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க