அழகு / ஆரோக்கியம்

எலுமிச்சை தேநீர்

தினமும் நீங்கள் எலுமிச்சை தேநீர் பருகி வந்தால் உடலின் எடை குறைவதோடு, அதனால் பல சுகாதார நன்மைகளும் உண்டாகும்.

ஒரு கப் தேநீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் தேவையான அளவு சீனியும் கலந்து காலையில் குடித்து வந்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

உடலில் உள்ள நச்சுகளை சுத்தப்படுத்தி, மேலதிக கொழுப்புகளை கரைத்து, உடலின் எடையை குறைக்கும்.

சாப்பிட்ட உணவு நன்றாக சமிபாடு அடைவதற்கு இத்தேநீர் பெரிதும் உதவும்.

நமது உடலிற்கு ஒவ்வாத உணவை உட்கொண்டிருந்தாலும் அவற்றையும் சமிபாடு அடைய வைக்கும்.

மூளை நரம்புகளை வலிமை பெறச் செய்யும். இதனால் தலைவலி, மன அழுத்தங்கள் வருவதை தடுக்கும்.

நெஞ்சு வலி. நெஞ்சு எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

நமது உடலில் இன்சுலின் குறைந்தாலும் நீரழிவு நோய் ஏற்படும் என்பது நாம் அறிந்ததே. எலுமிச்சை தேநீர் இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்யும்.

தினமும் காலையில் எலுமிச்சை சாறு பருகி வந்தால், அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

கருத்து தெரிவிக்க