நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குனர் விஜய் , இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார்.
மணமகள், ‘எம்.பி.பி.எஸ்.’ பட்டம் பெற்ற வைத்தியர் என குறிப்பிடப்படுகின்றது.
2014-ம் ஆண்டில் நடிகை அமலாபால், இயக்குனர் விஜய் திருமணம் செய்துகொண்டார்கள். மூன்று வருடங்களுக்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017-ம் ஆண்டில் விவாகரத்து செய்துகொண்டார்கள்.
இந்நிலையில் பெற்றோரின் 2-வது திருமண வேண்டுகோளுக்கு விஜய் சம்மதித்து உள்ளார். அவர் மணக்க இருக்கும் பெண்ணின் பெயர், ஐஸ்வர்யா. சென்னையை சேர்ந்த இவர் வைத்தயராக கடமையாற்றுகிறார்.
அஜித்குமார் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க