அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வரை சேர்ந்த கொன்னி மான்சிஸ் என்ற பெண், தன் கணவரை அழைத்து வருவதற்காக டென்வர் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாற்றுப் பாதையில் செல்ல கூகுள் வரைபடத்தில் தேடியுள்ளார். அதன்போது கூகுள் காட்டிய 23 நிமிடங்களில் குறுக்கு வழியாக செல்லக்கூடிய பாதையில் காரைச் செலுத்தினார்.
மண் பாதையில் சென்ற அவரது கார் , சிறிது தூரம் சென்றதும் சேற்றில் சிக்கிக் கொண்டது. அவர் மட்டும் அல்லாது ஏற்கனவே அவ்வழியால் சென்ற 100 கார்கள், கூகுள் வரைபடத்தை நம்பி சேற்றில் சிக்கிக் கிடந்தன. ஒரு கார் மட்டுமே செல்லக்கூடிய அந்த பாதையில் வாகனத்தை திருப்ப முடியாமலும், சிக்கிய கார்களை மீட்க இயலாமலும் வாகன சாரதிகள் பல மணித்தியாலங்கள் தவித்தனர்.
கருத்து தெரிவிக்க