வெளிநாட்டு செய்திகள்

தேர்தலில் தலையிட வேண்டாம் : ட்ரம்ப்

ஜப்பானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்யாவின் ஜனாதிபதி புதினும் சந்தித்து உரையாடிய போது, செய்தியாளர் ஒருவர் ட்ரம்பிடம் “வரும் தேர்தலில் ரஷ்யாவை தலையிட வேண்டாம் என கண்டிப்பீர்களா? ” என்று வினா எழுப்பினார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், புதினிடம் “தயவுசெய்து தேர்தலில் தலையிடாதீர்கள்” என நகைச்சுவையாக கூறியுள்ளார்.  2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் , ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து , குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க