அழகு / ஆரோக்கியம்

எளிய முறையில் முகத்தை பளபளக்கச் செய்வது எப்படி…?

விற்றமின் E இல் உள்ள எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் முகம் பளபளப்பாகும்.

குளிக்கும் போது சவர்க்காரத்திற்கு பதிலாக கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு விட்டு குழைத்து , அதனை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை இலகுவாக உதிர்ந்து தேகம் புத்துணர்வு பெறும்.

வேப்பிலையை நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

முகத்தில் உள்ள தேமலை நீக்கி முகம் அழகு பெற, எலுமிச்சைச் சாறுடன் துளசி இலையை அரைத்து பூசி வர வேண்டும்.

பயற்றம்மாவுடன் வத்தகைப் பழச்சாறு கலந்து குழைத்து பூசி வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

கருத்து தெரிவிக்க