இலங்கை

வட மாகாணத்திற்கு எனது முழு உத்துழைப்பையும் வழங்க தயார்! ஆளுநர். பி.எஸ். எம். சார்ல்ஸ்

வடமாகாணத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு ஜனாதிபதி, பிரதமர் தயாராகவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளுடன் போதைப்பொருள் விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செயற்பாடுகள் தொடர்பான மாதாந்த மீளாய்வுக் கூட்டம் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் வட மாகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மருத்துவ சோதனைகளுடன் போதைப் பொருட்களின் பயன்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பாடசாலைகள் மீளச்செயற்பட ஆரம்பித்துள்ள இத்தருணத்தில் அச்செயற்பாட்டினை முன்னெடுப்பதன் மூலம் இளம் சமுதாயத்தின் எதிர்காலத்தினை பாதுகாத்து நல்வழிப்படுத்த முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய அரசாங்கம் உள்ளிட்டோர் வட மாகாண வளரச்சிக்கான திட்டங்களுக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

எமது மாகாணத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் உரிய முறையில் இனங்கண்டு அவற்றை உரிய வழியில் பெற்றுத்தர மாகாண சபையும் அதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பை வழங்க நானும் தயாராகவுள்ளேன் என்றார்.

கருத்து தெரிவிக்க