சுவிட்சலாந்து வங்கிகளில் அதிகமான வெளிநாட்டினர் தங்கள் பணத்தை சேமித்து வருகின்றனர். இவர்களின் விபரங்கள் எதனையும் வெளியிடாமல் பாதுகாத்து வரும் இந்த வங்கிகளில் இந்தியர்களும் ( தனிநபர் மற்றும் நிறுவனங்கள்) கோடிக்கணக்கான பணத்தை சேமித்து வருகின்றனர்.
இவ்வாறு தங்கள் வங்கிகளில் வெளிநாட்டினர் சேமித்து வரும் பணம் பற்றிய விபரங்களை சுவிஸ் மத்திய வங்கி வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் வெளியிட்ட , வெளிநாட்டினரின் மொத்த தொகையின் புள்ளி விவரங்களின் படி, 2018 ஆம் ஆண்டு இந்தியர்களின் மொத்த சேமிப்பு தொகையின் மதிப்பு, 955 மில்லியன் சுவிஸ் பிராங்க் ( இந்திய ரூபாய் கிட்டத்தட்ட 6.757 கோடி) ஆகும்.
அதேவேளை இந்தியர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களில் சேமிக்கும் பணம் இதில் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க