உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்முக்கிய செய்திகள்

இந்துக்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

இலங்கையில் வாழும் இந்துக்களின் பாரம்பரிய உரிமைகள் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதற்கு இந்து சமய விவகார அமைச்சு விசேட பொறிமுறையை வகுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

உகந்தை ஶ்ரீ முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம யாத்திரைக்கான பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

“வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காமம் ஆடிவேல் திருவிழா ஜுலை முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக காட்டுவழியாக பாதயாத்திரை மேற்கொள்ளும் அடியார்களின் பிரதான திருத்தலமாக ஶ்ரீ உகந்தைமலை முருகன் ஆலயமே விளங்குகின்றது.

மேலும், உகந்தைமலை திருத்தலத்தில் ஆரம்பமாகும் இந்த பாதயாத்திரை நிகழ்வை தேசிய மட்ட நிகழ்வாக நடத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தோடு யுத்தகாலத்தில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட திருத்தலங்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க