முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளுக்கு, தீர்வு கிடைக்காத பட்சத்தில், கடந்த ஆண்டுபோலவே போராட்டம்வெடிக்கும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தீர்வுகிடைக்காதவிடத்து ஜனநாயக ரீதியிலான வழியில் தாங்கள் போராடுவோம் என்பதை மீனவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
முல்வைத்தீவு மாவட்ட மீனவர்கள் சுமார் 74கடல் மையில் தூரப் பரப்பிலுள்ள கொக்கிளாய் தொடக்கம் பேப்பாரப்பிட்டி வரையான தூரப் பகுதியில் நன்றாக தொழிற் செய்துகொண்டிருந்தனர்.
தற்போது சட்டவிரோத தொழில்களால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளிச்சம்பாய்ச்சி மீன் பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல், சுருக்குவலை ஆகியன தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில்கூட, தற்போது தடைசெய்யப்பட்ட தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் இன்றுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
குறிப்பாக தென்னிலங்கை மீனவர்கள் எமது முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் 5060குடும்பங்களுக்கு மேற்பட்டவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை செய்பவர்களைத் தடுத்து நிறுத்தி எங்களுடைய மாவட்ட மீனவர்களின் வாழ்க்கைக்கு உதவ சம்பந்தப்பட்ட திணைக்களமோ, கடற்படை அதிகாரிகளோ, அமைச்சர்களோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க