உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை பதிவுசெய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய சாட்சியப்பதிவின்போது ஊடகவியலாளர்கள் வெளியேறுமாறு கேட்கப்பட்டனர்.
இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க இன்றைய அமர்வின்போது சாட்சியம் வழங்கினார்.
பாதுகாப்பு தொடர்பான சில முக்கிய விடயங்;களை இராணுவத் தளபதி வெளியிடலாம் என்ற எதிர்பார்;ப்பின் காரணமாகவே ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்கப்பட்டனர்.
சாட்சியத்தின் முதல் 10 நிமிட நேரத்துக்கு மாத்திரம் ஊடகவியலாளர்கள் அமர்வின் செய்திகளை சேகரிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது பாதுகாப்பை பலப்படுத்தல் தொடர்பாக இராணுவத்தளபதி சில கருத்துக்களை முன்வைத்தார்.
இதேவேளை தெரிவுக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சென்றுள்ளார்.
கருத்து தெரிவிக்க