அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ இன்று இந்தியாவிற்கு செல்கிறார்.
இந்த பயணத்தின் போது, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்து பேச உள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்து வந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 28- 29 ஆம் திகதிகளில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி சந்திக்க இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த விஜயத்தை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க