அரபு மொழியில் பெயர்பலகைகளை காட்சிப்படுத்துவது சட்ட விரோதமானது என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெவித்துள்ளார்.
இவ்வாறு வைக்கப்படுள்ள பெயர்பலகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அகற்றுவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் முழுமையான ஆதரவை தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் அரபு மொழியில் பெயர்பலகைகள் வைப்பது தவறு எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
கருத்து தெரிவிக்க