அழகு / ஆரோக்கியம்

நலம் தரும் யோக முத்திரைகள் தொடர்……

நிலம், நீர் , காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூத தத்துவங்களின் அடிப்படையில் அமைந்தது தான் மனித உடல் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள். உடலில் இந்த ஜந்து நிலைகளும் சமச்சீராக இருந்தால் ஒருவர் ஆரோக்கியமானவராக இருப்பார். ஜந்து விரல்களை வைத்தே முத்திரைப் பயிற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த பயிற்சியின் அடிப்படையான 10 முத்திரைகளை முதலில் பார்ப்போம்.
பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகள் செய்வது நல்லது . முத்திரைகள் செய்யும்போது விரலோடு விரல் அழுத்தி தொட வேண்டும் என்பதில்லை. மெதுவாக தொட்டாலே போதும். ஆரம்பத்தில் 10 தொடக்கம் 15 நிமிடங்கள் வரை செய்யத் தொடங்கி பின் நேரத்தைக் கூட்டி 45 நிமிடங்கள் செய்யலாம்.

ஞான முத்திரை :

செய்யும் முறை ,
ஆட்காட்டி விரல் நுனியால் பெரு விரல் நுனியைத் தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கையை நிலத்தை நோக்கி கவிழ்த்து வைக்க வேண்டும்.

பலன்கள் ,

பெரு விரல் நுனிகள் நாளமில்லா சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆட்காட்டி விரல் நுனியால் பெரு விரலைத் தொடும் போது சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். மூளைக்கு அதிக இரத்த ஓட்டம் செல்லும் . மூளையின் செயற்பாடு, நினைவாற்றல் போன்றவற்றை அதிகரிக்கச் செய்யும். அறிவையும், ஒருமுனைப்படுத்தலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோக முத்திரை இது. இதனை பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டும். ஒரு முனைப்படுத்தலை மேம்படுத்தி , தூக்கமின்மையை போக்கி கோபத்தைக் கட்டுப் படுத்த உதவும்.

கருத்து தெரிவிக்க