உள்நாட்டு செய்திகள்புதியவை

30 வருட பிரச்சினையை குறுகிய காலத்தில் தீர்ப்பேன்-ஞானசாரதேரர் சூளுரை

30 வருடங்களாக தீர்க்கப்படாமலிருக்கின்ற கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை மிக மிக, குறுகிய காலத்திற்குள் தீர்த்து வைப்பேன் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை சந்தித்த பின் மக்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

கே.டப்ளியு.தேவநாயகம் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 13 அமைச்சர்களின் கையிலே 30 வருடங்களாக மாறி, மாறி, இன்னும் தரமுயர்த்த படாமலிருக்கின்ற இந்தப்பிரதேச செயலகத்தை குறுகிய காலத்திற்குள் தரமுயர்த்தித் தருவேன்.

எனவே இந்தப்பிரச்சனையை தொடர்ந்து நீடிக்காமல், இந்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்த எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம் தரப்பினரும், இந்த மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காண முன்வரவேண்டும் .

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நாங்கள் மதிக்கின்றோம். ஒரு அகிம்சை ரீதியான போராட்டத்தின் இறுதி வடிவம்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டமாகும்.

30 வருடகாலமாக இந்த தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்காமல் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதியை கவனத்திலெடுத்து, இங்கு மதத் தலைவங்கள், இளைஞர்கள் என பலரும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்கு எதிராக முஸ்லிம் மக்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவை அனைத்திற்கும் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் மக்களை வழிநடாத்திய அரசியல் வாதிகள்தான். இந்தப் பிரச்சனை காரணமாக மக்களிடையே சந்தேகப்பார்வை ஏற்பட்டுள்ளது. சமூக ஒற்றுமை சிதைந்து போயிருக்கின்றது என தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க