விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் இன்று மதியம் 2.00 மணிக்கு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுவரை வழங்கப்பட்ட சாட்சியங்களை தெரிவுக்குழு உறுப்பினர்கள் ஆராய்வார்கள் என தெரிவுக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
மே 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் இது வரையில் பொலிஸ் மா அதிபர், தொளஹீத் ஜமாத் அமைப்பின் பொது செயலாளர்,மற்றும் கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
விசாரணைகளில் ஈடுபட்டோர் அளித்த ஆதாரங்களை உறுதிப்படுத்த வேண்டியிருப்பின், சாட்சியங்களை பதிவு செய்யும் இறுதிக் காலத்தில் அவர்கள் முறைப்பாடு செய்ய அழைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க