உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சூடு பிடிக்கிறது ‘கல்முனை விவகாரம்’ முஸ்லிம்கள் இன்று முதல் போராட்டம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த அனுமதிக்கக்கூடாது என அரசாங்கத்தைக் கோரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இன்று காலை முதல் கல்முனை முஸ்லிம் சமூகத்தினர் ஈடுபடவுள்ளனர்

கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய வீதியில் இந்தப் போராட்டம் ஆரம்பமாகின்றது.

இதேவேளை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கல்முனை மாநகர சபை வளாகத்தில் நேற்று மாலை கலந்துரையாடல் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், வர்த்தக சமூகத்தினர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தின் முடிவில், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி நடத்தப்படும் போராட்டத்துக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, நேற்றிரவு கல்முனை தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு முன்னால் கடந்த மூன்று நாட்களாக நடக்கும் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தால் பொதுப்போக்குவரத்துக்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றன எனவும், அவசரகாலச் சட்ட விதிகளுக்கமைய அப்போராட்டத்தை சமூக நல்லிணக்கம் கருதி அகற்ற வேண்டும் எனவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க