கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீணடும் அமைச்சர்களாக பதவியேற்றமை தொடர்பில் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்ஸா, எந்த அடிப்படையில் அமைச்சர்களாக கபீர் ஹாசிமும் ஹலீமும் மீண்டும் பதவியேற்றனர் என்று கேள்வி எழுப்பினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை ஒரு மாதத்துக்குள் முடிக்குமாறு கோரியே முஸ்லிம் அமைச்சர்கள் பதவியில் இருந்து விலகினர்.
எனினும் ஒரு மாதம் முடிந்துவிட்டது. விசாரணைகள் முடியவில்லை.
எனவே இதில் எதனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் என்று லன்ஸா வினவினார்.
எனினும் அமைச்சர்களை நியமிப்பது நாடாளுமன்றத்தின் கடமையல்ல என்று அவை தலைவர் லச்மன் கிரியெல்ல பதிலளித்தார்.
கருத்து தெரிவிக்க