உலகில் கடந்த 76 ஆண்டுகளில் குவைத், பாகிஸ்தானில் அதிக வெப்பம் பதிவானதாக உலக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. உலகில் அதிகளவு வெப்பநிலை, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 56.7 செல்சியஸ், துனிசியாவின் கெப்லி நகரில் , 1931 ஆம் ஆண்டு ஜூலை 7 இல் 55 செல்சியஸ், 2016 ஆம் ஆண்டு ஜூலை 21 இல் குவைத்தின் மித்ரிபாஹ் பகுதியில் 53.9 செல்சியஸ் பதிவானது. அதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் துர்பத் பகுதியில் 53.7 செல்சியஸ் ஆக பதிவானது. நீண்ட ஆய்வுக்குப் பின் பாகிஸ்தான் குவைத் ஆகிய நாடுகளில் பதிவான அதிகளவு வெப்பநிலையை உலக வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்றுக் கொண்டது.
கருத்து தெரிவிக்க