உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜூன் 23 முதல் ஜூலை 1 போதை ஒழிப்பு வாரமாக பிரகடனம்

எதிர்வரும் ஜூன் 23 முதல் ஜூலை 1 வரையான வாரத்தை போதை ஒழிப்பு வாரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இதற்கமைய அந்த வாரத்தில், நாடு முழுவதும் புனர்வாழ்வு மற்றும் போதைப்பொருள் தடுப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் பணியகம், தேசிய ஆபத்தான போதை கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயற்குழு ஆகியவை மேற்படி திட்டங்களை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே , போதைப்பொருளின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டங்களை ஜூன் 26 ஆம் திகதி ஜனாதிபதி அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தில் இந்த சட்டங்கள் அமுலாகும் என குறிப்பிடப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க