எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி (67) உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் அரச தொலைக்காட்சியை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றுக்கு வருகை தந்த சமயம். திடீர் என மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டு ஏற்பட்ட அரபு வசந்தத்தின் மூலம், 30 வருடகால ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, 2012ஆம் ஆண்டு ஜனநாயக ரீதியில் முஹம்மத் முர்ஸி எகிப்தின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து அவர் சிறை பிடிக்கப்பட்டு, உயிரிழக்கும் வரை கைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க