உள்நாட்டு செய்திகள்புதியவை

மதுவரிச் சட்டத்தை மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை!

மதுவரிச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, நேற்று சனிக்கிழமை 15ஆம் திகதி முதல் மதுவரிச் சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்கான விஷேட வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக நாடு முழுவதுமுள்ள 58 மதுவரித் திணைக்கள அலுவலங்களில் கடமைபுரியும் 1000இக்கும் அதிகமான அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு மதுவரித் திணைக்களம் தொலைபேசி இலக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை 011 2192192 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு வழங்க முடியும் என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க