லிபியாவில் இரு தரப்பினரிடையே இடம்பெற்ற மோதலில் 42 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என ஐ,நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படை வசம் உள்ள லிபிய தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலிலேயே இவ்வாறு மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இரு தரப்பினருக்குமான தாக்குதல் உச்சமடைந்துள்ளது.
இந்த தாக்குதல்களில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 2 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவ்விடத்தை விட்டு வெளியேறி உள்ளனர் எனஐக்கிய நாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க