வெளிநாட்டு செய்திகள்

ஹொங்கொங் சட்ட திருத்தம் நிறுத்தப்பட்டது – மக்கள் போராட்டத்துக்கு வெற்றி

கைதிகளை சீனாவுக்கு அனுப்பி விசாரணை மேற்கொள்ளும் ஹொங்கொங் நிர்வாகத்தின் திட்டத்தை மக்கள் போராட்டம் முறியடித்துள்ளது.

‘சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றும் நடவடிக்கையை அரசு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணிகளை சட்டசபை நிறுத்தி வைக்கும்.

சமூகத்தின் அனைத்து தரப்பினருடனான எங்கள் தகவல் தொடர்புகளை மீண்டும் தொடங்குவோம். சமூகத்தின் பலதரப்பட்ட கருத்துகளையும் கேட்க முடிவு செய்துள்ளோம்’. என அதன் நிர்வாக தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.

எங்கள் நடவடிக்கையில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் வேறு பல காரணிகள்தான் சமூகத்தில் சர்ச்சைகளை, பிரச்சினைகளை தூண்டி விட்டன.

இதற்காக நான் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களி சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால் இது, ஹொங்கோங் மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கடந்த 9 ஆம் திகதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர . இந்நிலையில் அவர்களது போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

கருத்து தெரிவிக்க