இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்குதல் நடத்தியவர்களால் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை கண்டறிய அமெரிக்கா புலனாய்வு பிரிவு இலங்கைக்கு உதவி புரிவதாக அந்நாட்டின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவின் உதவி பெறப்பட்டுள்ளதுடன் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு இது தொடர்பிலான அறிவுறுத்தல்களை பெற்று கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே விசாரணைகள் இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு குறித்து இருநாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் அவர் கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.
கருத்து தெரிவிக்க