உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரச நிறுவன பெண்களின் ஆடை சுற்றறிக்கை திருத்தி வெளியிடப்படும்.

அரச நிறுவனங்களில் பெண்களுக்கான ஆடைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில் இன்று பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜேஜே ரட்னசிறிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது இந்த சுற்றறிக்கையை வெளியிட யார் அனுமதி தந்தது என்று தெரிவுக்குழுவினர் வினவினர்.

அதற்கு பதிலளித்த ரட்னசிறி, அமைச்சர் இதற்கான அனுமதியை வழங்கியதாக குறிப்பிட்டார்.

எனினும் அமைச்சருக்கு இந்த விடயம் தெரிந்திருக்கவில்லை என்று தெரிவுக்குழுவினர் குறிப்பிட்டபோது அமைச்சின் செயலாளர் அதனை மறுத்தார்.

புதிய ஆடை சுற்றறிக்கையின்படி பெண்கள் சேலை அல்லது ஓசாரி ஆண்கள் அலுவலக ஆடை அல்லது தேசிய ஆடைகளை அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இதற்கு எதிராக பல முஸ்லிம் பெண்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாக தெரிவுக்குழு தெரிவித்தபோது அவர்கள் முதலில் தமது திணைக்கங்களில் முறையிட்டிருக்கவேண்டும் என்று அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஆடை தொடர்பான சுற்றறிக்கை திரும்பப்பெறப்படவில்லை என்றுக்குறிப்பிட்ட அவர் அது திருத்தப்பட்டு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க