வடக்கு செய்திகள்

புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயம் பிரதேச சபையின் கீழ் கொண்டுவரப்பட்டது

புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் கொண்டுவருவதற்காக தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் இந்த வருடத்துக்கான 06 ஆவது அமர்வு இன்று நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செ.பிறேமகாந் தலைமையில்  இந்த அமர்வு இடம்பெற்றது.

இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசனால் கொண்டுரப்பட்ட குறித்த தீர்மானம் 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்ட மக்களை அடக்கம் செய்த இடம் சுனாமி நினைவாலயமாக பிரகடனம் செய்யப்பட்டு பேணப்பட்டு வருகின்றது

போரின் பின்னரான காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இந்த இடத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் மக்களின் கோரிக்கைக்கு அமைவாகவும் பிரதேச சபையின் சட்டதிட்டத்திற்கு அமைவாகவும் இந்த இடம் பிரதேச பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க