சமஸ்டி கேட்டவர்கள் இப்பொழுது சமுர்த்தி கேட்டு திரிகிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் மூன்று முப்பது மணியளவில் இடம்பெற்ற வாராந்தப் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்
இன்னும் நான்கு மாதத்தில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க இருக்கின்றோம்.
நாம் ஜனாதிபதி பிரதமர் எமக்கு அரசியல் தீர்விற்கு உதவுவார்கள் என்று நம்பி இருந்தோம்.
ஆனால் நான்கு ஆண்டுகளை கடந்துவிட்ட போதும் எதுவும் நடக்கவில்லை.
.
ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்க இருக்கின்றோம்.
அதற்காக மக்கள் வரிப்பணத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சமுர்த்தி கம்பரேலிய போன்ற திட்டங்களை சிலர் காவித் திரிகின்றார்கள்.
சமஸ்டி கேட்டவர்கள் இபொழுது சமுர்த்தி கேட்டு திரிகின்றார்கள்
அதனை விட முன்னைய அரசாங்கத்தோடு இணைந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த டக்லஸ் தேவானந்தா போன்றவர்களை விமர்சித்தவர்கள் இன்று அதனையே செய்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்
இவ் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வில் பிரத விருந்தினராக மாவை சேனாதிராஜா சிறப்பு விருந்தினராக சி.சிறிதரன் தவிசாளர்களான வேழமாலிதன்,சுரேன் , வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான குருகுலராஜா தவநாதன் எனப் பலரும் கலந்துகொண்டனர்
கருத்து தெரிவிக்க