மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதியொருவரின் சாரதி அனுமதி பத்திரத்திற்கு வாழ்நாள் தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை கம்பஹா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி கம்பஹா நகரில் மதுபோதையில் தனியார் பேருந்தை செலுத்திய குறித்த சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வழக்கு விசாரணை அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து இந்த உத்தரவை நீதிபதி அறிவித்தார்.
கருத்து தெரிவிக்க