டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 3,33,008ஐ தாண்டியுள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கை 9520ஐ தாண்டியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இன்னொரு பக்கம் இந்தியா – சீனா இடையிலான பிரச்சனை முடிவது போல தெரியவில்லை. அதேபோல் இந்தியாவின் லிபுலேக், கல்பானி உள்ளிட்ட பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி மேப் வெளியிட்டுள்ளது. இப்படி வரிசையாக நிறைய பிரச்சனைகள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். மூத்த அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்கிறார்கள்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இந்த ஆலோசனையில் கலந்து கொள்கிறார்கள். கொரோனா பரவல் தொடங்கி எல்லை பிரச்சனை வரை பல விஷயங்களை இன்று ஆலோசனை செய்ய இருக்கிறார்கள்.
கருத்து தெரிவிக்க