அமெரிக்காவுக்கும், ஏனைய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக போர், உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்று ஜி20 மாநாட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும ஏனைய நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரானின் அத்துமீறலால் அமெரிக்கா, ஈரானின் கச்சா எண்ணெய் வருவாயை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளது.
அதனால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அச்சுறுத்தி உள்ளது.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பெற்றிருந்த விலக்கு சலுகையையும் ரத்து செய்துவிட்டது.
இந்தியாவுக்கு அளித்திருந்த வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தையும் திரும்பப் பெற்றுவிட்டது.
மேலும், தனக்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவுடனும் அமெரிக்கா மோதி வருகிறது.
இந்தநிலைமை ஏனைய நாடுகளையும் பாதிக்கும் என்று ஜி20 மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க