வீடு மற்றும் காணிகள் அற்ற மட்டக்களப்பு மக்களுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் அமைச்சினூடாக அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில் கொண்டுவரப்பட வீட்டுத்திடத்தில 4750 வீடுகள் நிருமாணிக்கப்பட்டிருக்கின்றன.
இன்னும் 5250 வீடுகள் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன.
தற்போது 100 வருடங்கள் வாழக்கூடிய 28000 பொருத்து வீட்டுத்திட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கம்பரெலிய வேலைத் திட்டத்தினூமாக 60 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட 3 வீதிகளை திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு களுதாவளையில் நேற்று இடம்பெற்றபோது அவர் இதனைக்குறிப்பிட்டார்.
எதிர்வரும் மாதம் இந்த வீட்டுத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் குறைந்தது 4000 வீடுகளையாவது முதல் தடைவ கொண்டு வருவதங்கு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க