விளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ணப் கிரிக்கட் போட்டியில் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தியுள்ளார். உலகக்கிண்ண போட்டித் தொடரில் 14 ஆவது லீக் போட்டி இன்று இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெறுகின்றது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இந்நிலையில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

கருத்து தெரிவிக்க