வடக்கு செய்திகள்

மன்னார் சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கப்பட்டது

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 ஆயிரத்து 113 சமுர்த்தி பயனா ளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு இன்று மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே, சிறப்பு அதிதிகளாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றிஸாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் அமைச்சின் அதிகாரிகள் சர்வமத தலைவர்கள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான சமுர்த்தி பயணாளிகளும் வருகை தந்திருந்தனர்.

இதன் போது அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டதோடு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில், இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தால் தாமதித்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க