உள்நாட்டு செய்திகள்புதியவை

பிரதமர் மோடிக்கு புத்தர் சிலை பரிசளித்த ஜனாதிபதி மைத்திரி

இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கௌதம புத்தரின் சிலை ஒன்றை பரிசளித்துள்ளார்.

தியான நிலையில் அமர்ந்திருப்பது போல அமைந்துள்ள பெறுமதி வாய்ந்த புத்தர் சிலை பரிசளிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தர் சிலை தொடர்பாக பிரதமரின் அலுவலக ட்விட்டர் தளம், வெண்தேக்கு மரத்தினால் அமைக்கப்பட்ட இந்த சிலையானது அனுராதபுர காலத்தில் அமைக்கப்பட்டதாகும். இதன் அசல் வடிவம் 4 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

இதை சிலையாக வடிப்பதற்கு இரண்டு வருட காலம் எடுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பரிசை ‘சிறந்த நண்பனின் சிறப்பு பரிசென’ தெரிவித்து பிரதமர் மோடி நெகிழ்ந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க