தமிழ் மக்கள் தமது உரிமைகளை கோரி அகிம்சை போராட்டங்களை நடாத்திய போது தமிழ் மக்களிற்கெதிரான வன்முறைகள் இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமீழீழ விடுதலைப் புலிகள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் அகிம்சை வழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பிரேரணையின் அமுலாக்கதின் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது எடுத்துக் கூறினார்.
குறித்த பிரேரணைகளின் கூட்டு பங்காளிகள் என்பதனை மறந்தவர்களாக அரசாங்கம் செயற்படுகின்றது என்றும் பிரேரணைகளின் முன் மொழிவுகளை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதனையும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
கருத்து தெரிவிக்க