அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சந்திரனை செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதி என்ற அர்த்தத்தில் பேசியதாக, நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டம் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்வீட் பதிவில், நிலவு செவ்வாயின் ஒரு பகுதி என பொருள் படும் விதத்தில் அடைப்புக் குறியிட்டு வெளியிட்டதே இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரபலங்கள் உட்பட சமூக வலைதள பயனாளிகள் இவ்விடயம் தொடர்பாக கேலியாகவும், விமர்சித்தும் வருகின்றனர்.
குறித்த ட்வீட் பதிவில், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை பற்றி நாசா பேசிக் கொண்டிருக்கக் கூடாது, அதனை 50 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா சாதித்துவிட்டது. அதற்குப் பதிலாக, செவ்வாய்க்கு செல்லும் திட்டம் போன்ற பெரிய திட்டங்களில் நாசா கவனம் செலுத்த வேண்டும் என மேலும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
கருத்து தெரிவிக்க