நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு சஜித் பிரமேதாஸவை வேட்பாளராக போட்டியிடச் செய்வார்களாயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தாம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாளைய தினம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திரசிங் மோடியின் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த இணையத் தளத்திற்கு இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமரின் விஜய அட்டவணை தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்ளும் முகமாகவே குறித்த இணையத்தளம் ஜனாதிபதியை வினவியுள்ளது. இந்திய பிரதமரின் விஜயத்தின் போது வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவருடன் இணைந்து செயற்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க