உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையில் மீண்டும் அரசியல் அதியுயர் சண்டை: மீண்டும் மோதுகிறார்-சபாநாயகர்!

நிறைவேற்று அதிகாரத்துக்கும் (ஜனாதிபதி), சட்டவாக்கத்துக்குமிடையில் (சபாநாயகர்) மீண்டும் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்மூலமே இந்த முறுகல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவை ஏற்கப்போவதில்லை என்றும் அதில் சாட்சியமளிக்க புலனாய்வாளர்களை அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி நேற்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு முன்கூட்டிய அறிவிப்பு விடுத்தபோதிலும் அவர் பதிலுரை வழங்கவில்லை எனவும் ஜனாதிபதி கவலை வெளியிட்டிருந்தார்.

அமைச்சரவை கூட்டத்தில் நேற்றிரவு நடைபெற்ற விடயங்களை ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் தொலைபேசி ஊடாக சபாநாயகருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன்போது தெரிவுக்குழு குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். அதில் நிறைவேற்று அதிகாரம் தலையிடக்கூடாது என்ற தனது முடிவை சபாநாயகர் இடித்துரைத்துள்ளார்.

அத்துடன் தெரிவுக்குழு விசாரணைக்கு யாரை அழைக்க வேண்டும் நேரடி ஒளிபரப்பை நிறுத்துவதா இல்லையா என்பது குறித்தும் தெரிவுக்குழுவே முடிவெடுக்க வேண்டும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார் என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

2018 ஒக்டோபரில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்கத்துக்குமிடையில் கடும் மோதல் ஏற்பட்டது.

ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஏற்பதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்திருந்தார்

நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் வகையில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியதையடுத்து எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நாடாளுமன்றத்தை அவர் கூட்டியிருந்தார்.

இந்தநிலையில் தெரிவுக்குழு விடயத்திலும் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் வகையிலேயே அவரின் அறிக்கை வெளியாகியுள்ளது

இதேவேளை 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு 11 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க