உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாட்டைவிட்டு செல்ல தீர்மானிக்கும் ஞானசார தேரர்!

ஜப்பானில் உயர்கல்வி மற்றும் மதநடவடிக்கைளில் ஈடுபடுவதற்காக மூன்றுவருட வதிவிட விசாவை கலகொட அத்தே ஞானசார தேரர் பெற்றுள்ளார்.

தனது உயர்கல்வியைத் தொடரும் வரை அவர் ஜப்பானில் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு முன்னரே 2018 ஆம் ஆண்டு ஞானசாரதேரர் ஜப்பானுக்கான விசாவைப் பெற்றுள்ளார்.அதன்படி ஞானசாரதேரர் ஜப்பான் செல்ல நேற்றைய தினம் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

முன்னதாக ஞானசார தேரர் மீதான பயணத்தடையை ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை கொழும்பு நீதவான் காஞ்சனா டி சில்வா நீடித்திருந்தார். எனினும் அவர் செய்த மனுவின் அடிப்படையில் அடுத்த தவணை வரும்வரை அவரது பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க