மன்னார்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தை மைப்படுத்தி சமய சமூக கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற ஜீன் மாதம் 10 திகதி தொடங்கி அடுத்தவருடம் ஜீன் 10 ஆம் திகதிவரை யூபிலி ஆண்டாக பிரகடனப்படுத்தி ஒரு வருடம் பல்வேறு பட்ட கலை கலாசார பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தெரிவித்துள்ளார்.
விசேட இரத்ததான நிகழ்வு, பொது சிரமதான பணிகள், முதியோர் இல்ல சேவைகள் ,மாபெரும் நடைபவணி , ஆசிரியர் உபசரிப்பு நிகழ்வு மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு என பல்வேறு பட்ட நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதே நேரத்தில் இறுதி நாள் நிகழ்வில் விசேட கலை நிகழ்வுகள் உட்பட பரிசளிப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே குறித்த நிகழ்வுகளுக்கு பாடசாலை பழையமாணவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என அனைவரும் கலந்து கொண்டு 150 வருட நிறைவு நிகழ்வை சிறப்பிப்பதுடன் ஒத்துழைப்பும் வழங்குமாறும் பாடசாலை நிர்வாகத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க