நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சர்ச்சைகளுக்கு பின் பதவி விலகிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆதாரமற்ற விடயங்களை விமல் வீரவன்ச வெளியிட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக சட்டத்தை நாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னராக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார். பின்னர் அந்த பதிவை மாற்றி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க