ஜூன் 14-ஆம் தேதி அன்று பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது பாந்த்ரா குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து திரையுலக சகோக்களிடமிருந்து இரங்கல் செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
சுஷாந்தின் தற்கொலைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, அவரது முன்னாள் மேனேஜர் திஷா சாலியன் ஜூன் 9 அதிகாலையில் மிக உயரமான மாடியில் இருந்து விழுந்து இறந்தார்.
தகவல்களின்படி, திஷா சாலியன் தற்செயலாக ஒரு கட்டிடத்தின் 12-வது மாடியில் இருந்து விழுந்து விழுந்தார். தனது பெற்றோருடன் தாதரில் வசித்து வந்த திஷா, மும்பையின் மலாடில் (Malad) உள்ள ஜன்கல்யன் நகர் பகுதியில் உள்ள தனது நண்பரின் இல்லத்திற்கு விஜயம் செய்திருந்தார், அங்கு ஆறு நண்பர்கள் இரவு உணவிற்குப் பிறகு மது அருந்திக்க்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 2.25 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை அடைந்த போலீசார், சாலியன் இரத்தக் வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டனர், மேலும் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவரது மரணம் விபத்தா அல்லது வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்த விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த சம்பவம் நடந்த 5 நாடகளில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை சம்பவம் நடந்ததுள்ளதால், இந்த இரண்டு மரணத்துக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த விசாரனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திஷாவின் மரணத்துக்கு சுஷாந்த் தனது இரங்கலை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க